மாணவியின் மரணம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியிடம் முறைப்பாடு
சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

16 வயது மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க ஒரு குழுவினரால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் பிரசாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
மாணவி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வகுப்பிற்குச் வந்ததால், அவரது பெற்றோரை அழைத்து, மாணவி நோயிலிருந்து குணமடைந்த பிறகு வகுப்புகளுக்குச் அனுப்புமாறு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தன் மீது கடுமையான விமர்சனங்கள் சுமத்தப்படுவதால் தான் வெட்கப்படுவதாகவும், யாரோ வேண்டுமென்றே இதைச் செய்கிறார்கள் என்று சந்தேகிப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை கல்போத்த வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி, கடந்த 29 ஆம் திகதி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.