கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

ஜுன் 27, 2025 - 23:23
கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கம்பஹாவைச் சேர்ந்த அந்த மாணவர், கொழும்பு மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுடன் அங்கு வந்திருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீருக்கடியில் நீந்துவதற்கும், பார்ப்பதற்கும் ஒரு பிரபலமான  “ஸ்நோர்கெலிங்” நீர் விளையாட்டுக்கு வந்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெலிங் கருவியை மீட்டதுடன், மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படையின் நீச்சல் வீரர்கள் இன்று (27) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!