கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே மாணவன் மரணம்; சிசிடிவி கமெரா HARD DISK மாயம்
மத்ரஸா சிசிடிவி கமெராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை - சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த 13 வயது மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம, நேற்று (07) அறிக்கையிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்ரஸா சிசிடிவி கமெராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.
சிசிடிவி கமெராவின் வன்பொருள் மீட்கப்பட்டால் பல உண்மைகள் வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் இன்னும் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அத்துடன், மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு, மீண்டும் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக அவரை இன்று (08) ஆஜரபடுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
(பாறுக் ஷிஹான்)
செய்திப் பின்னணி : சிறுவன் சடலமாக மீட்பு; மதரஸா நிர்வாகி கைது