இலங்கைக்கு காத்திருக்கும் சிக்கல்.. பங்களாதேஷுக்கு எதிரான தோல்வியால் ஆபத்து

இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

Nov 7, 2023 - 11:28
இலங்கைக்கு காத்திருக்கும் சிக்கல்.. பங்களாதேஷுக்கு எதிரான தோல்வியால் ஆபத்து

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியல் அடிப்படையில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணி தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த வகையில் போட்டியை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருப்பதால் அவர்கள் நேரடியாக தகுதி பெற்று இருக்கிறார்கள். இதேபோன்று இந்தியா தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடைசி இரண்டு இடத்தை பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பங்களாதேஷ் அணி இன்னும் ஒரு போட்டியில் விளையாடி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அவர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்க்கு சென்று விடுவார்கள். 

அதேபோல் இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

ஆனால் இலங்கை அணியை பொறுத்தவரை தங்களுக்கு இருந்த சுலபமான வாய்ப்பை அவர்கள் வீணடித்து கடினமாக்கி கொண்டார்கள். 
நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இலங்கை அணி பங்களாதேஷை வீழ்த்தி இருந்தால் அவர்கள் 6 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஏறக்குறைய தகுதி பெற்றிருப்பார்கள். 

ஆனால் அந்தப் போட்டியில் அவர்கள் தோல்வியை தழுவிய அளவில் தற்போது கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இதனால் இலங்கை அணியில் சாம்பியன்ஸ் கோப்பை கனவு கானல் நீர் போல் இருக்கிறது. இங்கிலாந்து அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் அவர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சென்று விடுவார்கள். 
இதனால் கடைசி இரண்டு இடத்தை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கை அணி, உலக கோப்பையில் தோற்றால் கூட சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காவது செல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.