இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 211/5

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடி வருகிறது. 

செப்டெம்பர் 8, 2024 - 10:56
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை 211/5

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் 2 டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில் 3வது டெஸ்ட் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் போப் 154 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை நேற்று 2 நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 114 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!