ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு வருமானம் இவ்வளவா?

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டில் மொத்தம் 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஜுலை 13, 2025 - 11:22
ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு வருமானம் இவ்வளவா?

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 இல் இலங்கை தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 635.7 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 22% அதிகமாகும்.

ஜனவரி முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த எண்ணிக்கை 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 18.9% அதிகமாகும்.

2024 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மொத்த பணம் 6.57 பில்லியன் அமெரிக்க டொலர்ஆகும்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டில் மொத்தம் 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!