கனடாவில் இலங்கையர் படுகொலை: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

சம்பவத்தில் தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 9, 2024 - 13:52
கனடாவில் இலங்கையர் படுகொலை: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கனடா படுகொலை சம்பவம்... இளைஞன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கல்வி கற்பதற்காக கனடாவுக்கு வந்துள்ள நிலையில், குறித்த குடும்பத்தினருடன் வாழ்வதற்கு முன்னர் வேறொரு இலங்கைக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.

சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
இந்நிலையில், வெளிநாட்டில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டொரண்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுடன் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!