கனடா படுகொலை சம்பவம்... இளைஞன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விஹாரையின் பௌத்த பிக்கு இந்த குடும்பம் பற்றிய பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.

மார்ச் 9, 2024 - 13:42
கனடா படுகொலை சம்பவம்... இளைஞன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கனடா - ஒட்டாவா படுகொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் அண்மையில் கொண்டாடியுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விஹாரையின் பௌத்த பிக்கு இந்த குடும்பம் பற்றிய பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த குடும்பத்தினர் மிகவும் கருணையானவர்கள் எனவும், மத வழிபாடுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் எனவும் இந்தக் குடும்பம் கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பந்தே சுனேத தேரர் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக பெர்பியன் டி சொய்சாவின் 19ஆம் பிறந்த நாளை இந்த குடும்பத்தினர் கூடி கொண்டாடி மகிழ்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தந்தையான தனுஷ்க விக்ரமரட்னவின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும், முகத்திலும் முதுகிலும், நெஞ்சுப் பகுதியிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பல்வேறு கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த குடும்பத்தினர் கனடாவிற்கு வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!