கடும் சரிவில் இலங்கை ரூபாய் - வேகமாக உயரும் டொலரின் பெறுமதி!
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.16 ரூபாயாகவும், கொள்வனவு விலை 313.29 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 249.00 ரூபாயாகவும், கொள்வனவு விலை 235.21 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், இன்றையதினம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.