சுனாமியில் உயிரிழந்தோருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி
மௌன அஞ்சலி: இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் ஆகின்றன.

இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் ஆகின்றன.
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று (26) நாடளாவிய ரீதியில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், மதச்சார்பற்ற விழாக்களுக்கு முன்னுரிமை அளித்து தேசிய பாதுகாப்பு தினத்தை அனுஷ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று (26) காலை 8.30 மணி முதல் பெருலிய சுனாமி நினைவிடத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2004 டிசெம்பர் 26 அன்று நிகழ்ந்த சுனாமி அனர்த்தம் காரணமாக, இலங்கையில் 31,225 இற்கும் அதிகமான உயிர்கள் உட்பட உலகெங்கிலும் 2,25,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.