இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பில் எந்த கவச வாகனங்களும் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, அத்தியாவசியமான செயற்பாடுகளுக்கு மாத்திரம் வரையறுத்து இம்முறை சுதந்திர தின விழா இடம்பெறும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், பொதுமக்கள் சுதந்திர தின வைபவத்தைப் பார்ப்பதற்கு அதிகமாக இட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.