எதிர்காலத்தில் எரிபொருள் விலை திருத்தம் போன்று மாதாந்தம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு போதிய பாதுகாப்புகள் இல்லாத நிலையில், இவ்வாறான பரந்த அதிகாரங்களை சபைக்கு வழங்குவது பொருத்தமற்றது என மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சரிடம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு: மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் காரணங்களை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தரப்புகளுடன் நானும் இணைகிறேன். உண்மை கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாகாண ஆளுநரால் தீர்வுகளை வழங்க முடியாமல் போனது ஏன் எனவும் சீனித்தம்பி நிமலன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.