பயணச்சீட்டு இன்றி பஸ்ஸில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அறவிடப்படும் அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அறவிடப்படும் அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணி ஒருவர் 3000 ரூபாய் அபராதத்தையும், பயண கட்டணத்தின் இரண்டு மடங்கையும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கட்டணம் செலுத்தாது பயணிக்கும் பயணிகளினால் நாள் ஒன்றுக்கு 70 இலட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை கூறுகின்றது.
அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பான சட்ட வரைவுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்த அபராத தொகை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையில் தலைவர் லலித் டி அல்விஸ் கூறியுள்ளார்.
பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு தற்போது 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.