இலங்கை

இனி 7 நாடுகளின் பிரஜைகள் இலவச விசாவில் இலங்கை வரலாம்!

இந்த விடயத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் செய்தியில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு புதிய நிதி நிவாரணம் அறிமுகம்!

வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பை வழங்கும் முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவு... வெளியான தகவல்

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கிணற்றில் இருந்து தாய் - குழந்தை சடலங்கள் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கும் வாரியபொல பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

நியாயமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வேண்டும் - இ.தொ.கா வலியுறுத்து

தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழு மோதல்; வாள்வெட்டில் ஐவர் படுகாயம்!

மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளுப்பிட்டி ரயில் சேவை பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு!

பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து,  பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை ; சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் விபத்து; இருவர் உயிரிழப்பு

விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களால் பதற்றம் ஏற்பட்டதாகவும் எனினும், தாம் விரைந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

2,087 குடும்பங்கள் பாதிப்பு; இன்றும் பலத்த மழை பெய்யும்!

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன் மற்றும் மரக்கறி விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்

தொடர்ந்து அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் நாளாந்தம் மாற்றம்: இலங்கையில் புதிய முறை

நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் வகையிலான விலை சூத்திர முறைமையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.