டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.