பாலியல் தொழில் ஈடுபட்ட 7 பெண்களுக்கு தொற்றுநோய்!

வவுனியாவில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜுன் 9, 2023 - 23:36
பாலியல் தொழில் ஈடுபட்ட 7 பெண்களுக்கு தொற்றுநோய்!

வவுனியாவில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்று (09) தெரிவித்துள்ளனர்.

இந்நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். 

குறித்த 7 பாலியல் தொழிலாளிகளும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!