இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை மகளிர் அணி
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 58 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் சுகந்திகா குமாரி, சமாரி அத்தபத்து தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 276 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 49.1 ஒவரில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 278 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 56 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டாலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 7ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.