போராட்டம் வாபஸ் பெறப்பட்டது: ரயில் சேவைகள் வழமைக்கு
நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து, "சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதி" வழங்கப்பட்ட கடிதங்கள் திரும்பப் பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரயில் சேவைகள் இன்று (12) காலை முதல் வழமைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.