இலங்கையில் இந்தவாரம் மிக நீண்ட விடுமுறை; வெளியான அறிவிப்பு

இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஜுன் 25, 2023 - 11:24
இலங்கையில் இந்தவாரம் மிக  நீண்ட விடுமுறை; வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அரசாங்கத்தினால் வங்கி விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சமீபகால வரலாற்றில் உள்ளூர் வங்கி துறைக்கு வழங்கப்பட்ட மிக நீண்ட விடுமுறையாகியுள்ளது. 

ஜுன் 29ஆம் திகதி வியாழக்கிழமை வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாகும். அன்றைய தினம் ஹஜ் பண்டிகைக்காக ஆண்டின் தொடக்கத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

மிக நீண்ட வங்கி விடுமுறை

இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

ஜூலை மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதி சனி மற்றும் ஞாயிற்றுகிழமையாகும். ஜூலை மாதம் 3 ஆம் திகதி போயா தினமாகும். இதனால், தொடர்ந்து 5 நாட்கள் நாட்டின் வங்கி சேவை முடங்கவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!