கோப்பையை பார்க்க கூட இல்லை.. நாடு திரும்பிய இலங்கை அணி
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்தப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி வெளியேற்றப்பட்டது.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்தப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி வெளியேற்றப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அணித்தலைவர் வனிது ஹசரங்க, வீரர்கள் செய்த தவறுகளாலும் சரியாக விளையாடாததாலும் இலங்கை அணி போட்டியில் இருந்து வெளியேறியதாக கூறினார்.
அத்துடன், அணித்தலைவர் என்ற முறையில் மிகவும் வருத்தமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வழமையாக விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையம் வழியாக வெளியேறும் வீரர்கள் இன்று விசேட முனையம் ஊடாக வெளியேறியுள்ளனர்.