டிசெம்பர் நீண்ட விடுமுறையில் விசேட ரயில் சேவைகள்
டிசெம்பர் 23ஆம் திகதி சனிக்கிழமை, 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அடுத்து, 25ஆம் திகதி நத்தார் பண்டிகையாகும். மறுநாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின விடுமுறையாகும்.

எதிர்வரும் டிசெம்பர் மாத தொடர் விடுமுறைகளில் விசேட ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறை வரையிலும், கண்டியில் இருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
டிசெம்பர் 23ஆம் திகதி சனிக்கிழமை, 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அடுத்து, 25ஆம் திகதி நத்தார் பண்டிகையாகும். மறுநாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின விடுமுறையாகும்.
இக்காலப்பகுதியில் பாடசாலைகளும் விடுமுறையாகையால் மக்கள் விடுமுறையையும் நத்தார் பண்டிகையை கொண்டாடும் பொருட்டே விசேட ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.