சபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவரகள் கூட்டம்!
இதன்போது, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 28ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தையின் முன்னேற்றம் தொடர்பில் நிதியமைச்சரின் அறிக்கை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.
இதற்கமைய அன்றைய தினம் முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 5.30 வரையில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.