விசேட வங்கி விடுமுறைக்கு இதுதான் காரணம் - மத்திய வங்கியின் அறிவித்தல்
29ஆம் திகதியன்று ஹஜ் பெருநாள் காரணமாக மூடப்படும் வங்கிகள், எதிர்வரும் 03.07.2023 திகதி வரை மூடப்பவுள்ளன.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கான காலம் அவசியமாக உள்ளதனால், எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
29ஆம் திகதியன்று ஹஜ் பெருநாள் காரணமாக மூடப்படும் வங்கிகள், எதிர்வரும் 03.07.2023 திகதி வரை மூடப்பவுள்ளன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த விடுமுறையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கு தயாராகவுள்ளோம்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறித்த விடுமுறையில் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் இயந்திரங்களின் ஊடாக வைப்புக்களை, வழமை போல் முன்னெடுக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.