தென்கொரிய ஜனாதிபதி கைது
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி இராணுவச் சட்டத்தை அறிவித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளர்ச்சியில் ஈடுபட்டதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவரைக் கைதுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
யூனைக் கைது செய்ய 3,200 பொலிஸார் சென்றதாகவும் யூனின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் மூண்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தென் கொரியாவில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்பட்டமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.