'ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது  திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வேட்பாளர் குறித்து திங்கட்கிழமை (ஜூலை 29) தீர்மானம் எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜுலை 26, 2024 - 15:51
ஜுலை 26, 2024 - 15:58
'ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது  திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வேட்பாளர் குறித்து திங்கட்கிழமை (ஜூலை 29) தீர்மானம் எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!