ராஜஸ்தானுக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: கோலிக்கு  அபராதம்

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணியால் 20 ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. 

ஏப்ரல் 26, 2023 - 19:04
ஏப்ரல் 26, 2023 - 19:06
ராஜஸ்தானுக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: கோலிக்கு  அபராதம்

ஐ.பி.எல். போட்டியில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணியால் 20 ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. 

இதை தொடர்ந்து ஐ.பி.எல். நடத்தை விதிமுறைகளின் படி பெங்களூர் அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அணி 2-வது முறையாக இதே தவறை செய்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெங்களூர் அணியின் கேப்டனாக டுபெலிசிஸ் உள்ளார். அவர் இம்பேக்ட் வீரருக்காக களத்துக்கு வெளியே இருந்தார். கேப்டனாக வீராட்கோலி பணியாற்றியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணியில் இடம் பெற்ற 11 வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!