திரையரங்குகளுக்குள் அலைபேசியை தடை செய்யுமாறு கோரிக்கை

திவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளில் அலைபேசிகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜுலை 18, 2024 - 15:35
திரையரங்குகளுக்குள் அலைபேசியை தடை செய்யுமாறு கோரிக்கை

அண்மையில் ஒரு திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளில் அலைபேசிகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர்களின் கடின உழைப்பையும் அவர்களின் வருமானத்தையும் பாதுகாக்க திரையரங்குகளில் கையடக்கத் தொலைபேசிகள் தடை செய்யப்பட வேண்டும் என திரைப்பட இயக்குனர் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திரையரங்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் ‘சிங்கபாகு’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததைக் குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் சோமரத்ன திசாநாயக்க இயக்கிய திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவுசெய்து யூடியூப்பில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கண்டியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!