அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகும் சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

ஏப்ரல் 18, 2022 - 21:33
அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகும் சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று(18) இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!