பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் எம்.பிகள்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈபட்ட உதவி முகாமையாளரை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
சபாநாயகர் அறிவிப்பின் போது மலையக எம்.பிகள் சிலர், ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி சபையின் நடுவில் அமர்ந்து பதாதைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.
இதன்போது, இந்த பிரச்சினை தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நடவடிக்கைகளை எடுப்பார் என சபாநாயகர் கூறினார். எனினும், மலையக எம்.பிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.