பொகவந்தலாவையில் ஆறு பேருக்கு சிக்குன்குனியா தொற்று
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 06 ஊழியர்களும் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.