முன்பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்; 6 பேர் பலி
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மீது இன்று (10) காலை 25 வயது இளைஞன் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் .

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மீது இன்று (10) காலை 25 வயது இளைஞன் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், மற்றும் ஒருவரை குறித்த இளைஞன் காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லியான்ஜியாங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலின் போது கத்தியால் குத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வூ என்ற குடும்பப்பெயருடன் லியான்ஜியாங்கைச் சேர்ந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்ற விவரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.