செந்தில் தொண்டமான் உட்பட ஆறு ஆளுநர்கள் இராஜினாமா

கிழக்கு மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட இதுவரை 06 ஆளுர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.

செப்டெம்பர் 24, 2024 - 14:01
செப்டெம்பர் 24, 2024 - 14:25
செந்தில் தொண்டமான் உட்பட ஆறு ஆளுநர்கள் இராஜினாமா

-பிறின்சியா டிக்சி

கிழக்கு மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட இதுவரை 06 ஆளுர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.

இவ்வாறு ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை  ஜனாதிபதி செயலகம்  வெளியிட்டுள்ளது.

இதன்படி, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ரவீந்திர அனுர விதானகமகே ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வெற்றிப்பெற்றதை தொடர்ந்து ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!