சுப்மன் கில் களமிறங்குவாரா? கடைசி நேரத்தில் கூட மாற்றம் வரலாம்.. ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்ட இந்திய இளம் வீரர் சுப்மன் கில் கடைசி நேரத்தில் கூட களமிறக்கப்படலாம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இதற்காக அக்.4ஆம் தேதியே இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் சேர்ப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். நட்சத்திர வீரர் விராட் கோலி கூடுதலாக 45 நிமிடங்கள் வரை வலைபயிற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் அந்த பயிற்சியின் போது இளம் வீரர் சுப்மன் கில்லை மட்டும் யாராலும் பார்க்க முடியவில்லை. வழக்கமாக பயிற்சியை தவறவிடாத பழக்கம் கொண்ட சுப்மன் கில் ஏன் முக்கியமான பயிற்சியில் ஈடுபடவில்லை என்ற சந்தேகம் எழுந்தது.
இதன் பின் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே சுப்மன் கில்லால் வலைப்பயிற்சியில் ஈடுபட முடியவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியாகியது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் சுப்மன் கில் களமிறங்குவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சுப்மன் கில் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
ராகுல் டிராவிட் பேசுகையில், சுப்மன் கில்லின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நன்றாக உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.
இதுவரை மருத்துவ குழுவினர் அவரால் களமிறங்க முடியாது என்று சொல்லவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவரை கண்காணித்து வருகிறோம். சுப்மன் கில் விவகாரத்தில் முடிவு எடுக்க எங்களுக்கு இன்னும் அவகாரம் இருக்கிறது.
கடைசி நிமிடம் வரை காத்திருந்து கூட முடிவு எடுக்கப்படலாம். அதனால் இதுவரை சுப்மன் கில் இடத்தில் வேறு வீரரை விளையாட வைப்பது குறித்து எதுவும் யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.