ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், டாப் 5 குள் நுழைந்த முக்கிய வீரர்கள்
இந்தப் பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
இந்தப் பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தரவரிசை பட்டியலில் 830 புள்ளிகளுடன் ஷுப்மன் கில் முதல் இடத்தில் இருக்கிறார். பாபர் அசாம் 824 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டிகாக் 771 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், இந்திய வீரர் விராட் கோலி 770 புள்ளிகள் உடன் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 743 புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்திலும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 739 புள்ளிகள் உடன் 6ஆம் இடத்திலும் உள்ளனர்.
முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்... சச்சின், தோனி வரிசையில் இணைந்தார்!
தென் ஆப்பிரிக்காவின் வான்டர் டேசன், அயர்லாந்தின் ஹாரி டெக்டர், தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசென், இங்கிலாந்தின் டேவிட் மலான் என முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ் 709 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 694 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், ஆடம் ஸாம்பா 662 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், இந்திய வீரர் குல்தீப் 661 புள்ளியுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா 654 புள்ளிகள் உடன் 8ஆம் இடத்திலும் , முகமது ஷமி 635 புள்ளிகள் உடன் 10ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.