வௌ்ளவத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்
வெள்ளவத்தை மரைன் டிரைவ் வீதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இன்று ( 27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை மரைன் டிரைவ் வீதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இன்று ( 27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு துப்பாக்கிதாரிகள் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.