பஸ் நிலையத்திற்கு அருகில் லொறி மீது துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், லொறியில் பயணித்த இரண்டு நபர்கள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.

கம்பஹா நகரில் உள்ள பொது பஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (15) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த சிறிய லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், லொறியில் பயணித்த இரண்டு நபர்கள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இருவருக்குமே காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், சம்பவத்தில் வாகனம் மட்டும் சேதமடைந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.