எல்பிட்டியவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவம்
படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டியவில் நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால், தனது வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தை கண்டறியவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், அப்பகுதியில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.