நான்கு விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுக்கவில் இருந்து இங்கிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் இடதுபுறத்தில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் இருவர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர்.
சடலம் இங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நாவுல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 27 வயதுடைய நபரொருவரும், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 49 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அகுனகொலபலஸ்ஸ பகுதியில் பாதசாரி பெண் ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 69 வயதுடைய பரவகும்புக பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.