கேகாலை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான்  பிரசாரம்

கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

பெப்ரவரி 9, 2023 - 20:47
கேகாலை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான்  பிரசாரம்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து  இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

 அத்துடன் இத்தோட்டங்களில் உள்ள இ.தொ.காவின் தோட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடனும் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். 

இங்கு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

 இந்த பிரசாரங்களில் இ.தொ.கா உப தலைவர் அண்ணாமலை பாஸ்கரன், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் , உறுப்பினர்கள் மற்றும் வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!