கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு பறிமுதல்

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டது.

பெப்ரவரி 3, 2023 - 15:55
கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு பறிமுதல்

(அந்துவன்)

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டது.

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் அதிகாரிகளால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கைப்பற்றப்பட்ட பச்சை தேயிலை கொழுந்து அளவீடு் செய்யப்படும் டிஜிட்டல் தாராசு, மூன்று ஆண்டுகளாக முத்திரை பதிக்கப்படாமல் காணப்பட்டுள்ளது.

இதனால் பொகவந்தலாவ தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!