யுத்தக் காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்கம், வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் கையளிப்பு

உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 

மே 3, 2025 - 00:15
மே 12, 2025 - 12:03

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் LTTE அமைப்பினர் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி என்பன பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், குறித்த தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர் அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!