ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு பலத்த பாதுகாப்பு
அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தமது கட்சித் தலைமையகத்திற்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனால், அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.