நாடளாவிய ரீதியில் மூடப்படும் பாடசாலைகள்!  வெளியான தகவல்!

குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை நாடு முழுவதும் மூடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுன் 27, 2023 - 14:40
நாடளாவிய ரீதியில் மூடப்படும் பாடசாலைகள்!  வெளியான தகவல்!

குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை நாடு முழுவதும் மூடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்து இருக்கின்றார்.

குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறிய பிரியந்த பெர்னாண்டோ, “பாடசாலைகள் மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமங்களில் இத்தகைய பாடசாலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதுபோன்ற பாடசாலைகள் படிப்பிக்கப்படாமல் மூடப்பட்டால், அந்த பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பை இழக்க நேரிடும். 

ஒதுக்குப்புறமான கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு 10 முதல்11 கிலோமீட்டர் தூரம் வரை பாடசாலைகள் கிடைப்பதில்லை. தேசியக் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தில் உள்ள நல்ல விஷயங்களைச் செயல்படுத்தாமல், பொருளாதார ரீதியில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவற்றை மட்டுமே அரசாங்கம் செயல்படுத்த முயல்கிறது.

இந்தத் திட்டத்தில் தொகுதி முறை, தொலைதூரக் கல்வி முறை, மாணவர் அடிப்படையிலான கல்வி முறை தொடர்பான அத்தியாவசிய முன்மொழிவுகளைத் தவிர்த்துவிட்டு, பாடசாலைகளை மூடுவதே முன்னுரிமையாக்கி குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!