ஆசிரியர்கள் - அதிபர்கள் சுகயீன விடுமுறை; பாடசாலை நடவடிக்கைகள் பாதிப்பு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை இன்றைய தினம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என குறிப்பிட்ட ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொழிற்சங்கத்தினால் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததையடுத்து, இன்று (26) இரண்டாவது நாளாக சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.