பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்

இலங்கையில் பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 12, 2022 - 20:15
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்

இலங்கையில் பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210. எனவே அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும்.

அடுத்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!