சரிகமப இறுதிப் போட்டி இன்று... அசானி ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்!
இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டி வரும் இன்று மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்-சீசன் 3’. குழந்தைகளின் இசை திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சியான இது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டி வரும் இன்று மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் நிஷாந்த் கவின்,கனிஷ்கர் ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு டைட்டிலுடன் ரூ.10 லட்சம் பரிசு தொகை கிடைக்கும். இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் இலவச டிக்கெட்டுகளை சென்னை கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியருக்கான சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் இலங்கை கண்டியை சேர்ந்த அசானி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று சில வாரங்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அசானி தமிழ்நாட்டை நம்பி வந்திருந்த நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று நடுவர்கள் முடிவெடுத்து இருந்தனர்.
முதல் பாடலின் மூலமாக அசானி அரங்கத்தில் இருந்தவர்களை மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களையும் வியந்து போக வைத்துவிட்டார். பிறகு சோசியல் மீடியா முழுவதும் இலங்கை பெண் அசானி குறித்து செய்திகள் தான் அதிகமாக உலா வந்தது.
பிறகு இந்த நிகழ்ச்சியின் அசானி செலிபிரிட்டியாக மாறி இருந்தார். அதைத்தொடர்ந்து அசானிக்கு ரசிகர்கள் அதிகளவில் இருந்தனர். இந்த நிலையில் இந்த சரிகமப சீசன் 3 லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கான பைனலிஸ்ட் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதில் அசானியின் பெயர் இடம் பெயரவில்லை. இதனால் ரசிகர்கள் இலங்கைப் பெண்ணான கில்மிஷா இறுதி லிஸ்ட் இருந்தாலும் அசானி இல்லையே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
அதோடு அசானியை ஜீ தமிழ் டிஆர்பிக்காக மட்டும் தான் பயன்படுத்திக் கொண்டார்களா என்று அதிகமான ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.