கும்ப ராசியில் சூரியன் - சனி  இணைவு... 12 ராசிகளுக்கும் நடக்கப்போவது என்ன?

கும்ப ராசியில் தற்போது சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள்.  இதன் மூலம் எந்த  ராசியினர் என்ன  மாதிரியான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம். 

Feb 21, 2024 - 14:02
கும்ப ராசியில் சூரியன் - சனி  இணைவு... 12 ராசிகளுக்கும் நடக்கப்போவது என்ன?

கும்ப ராசியில் தற்போது சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள்.  இதன் மூலம் எந்த  ராசியினர் என்ன  மாதிரியான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம். 

மேஷ ராசி: மேஷ ராசிக்கு சூரியன் ஐந்தாம் அதிபதி. அவர் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் இருப்பது மிக மிக ஏற்றத்தை கொண்டு வரும். சூரியன் சனி  இணைவு மேஷ ராசிக்கு குழந்தை பேறு, திருமண பாக்கியம்,  சுப காரியங்களில் ஈடுபடுதல் போன்ற நல்ல நன்மையான  பலன்களே நடைபெறும்.  குறிப்பாக அரசு உத்தியோகத்திற்காக காத்திருக்கும் மேஷ  ராசியினர்களுக்கு நிச்சயமாக அரசு உத்தியோகத்திற்கான வாய்ப்புகள் உண்டு.  தொழில் முன்னேற்றமும் உண்டு.

ரிஷப ராசி: அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில்  சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள்.  உங்களுடைய ராசிக்கு சனி யோகாதிபதியும் சூரியன்  நான்காம் வீட்டிற்கு  அதிபதியும் ஆவார்.  வீடு, மனை தொடர்பான விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.  புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று இருக்கும் உங்களுக்கு  ஒரு வேலைக்கு இரண்டு வேலை கிடைக்க போகிறது.  சூரியன் சனி  சேர்க்கை  ரிஷப ராசிக்கு அற்புதமான  இணைவு. 

மிதுன ராசி: அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு அஷ்டமாதிபதியும், வெற்றிக்கு ஸ்தான அதிபதியுமான சூரியன் சனி உடன்  இணைவது ஏற்ற இறக்கமான பலன்களை கொண்டு வரும்.  உங்களுடைய ராசிக்கு  ஒன்பதாம் வீட்டில் சூரியனும் சனியும் இணைந்து இருப்பது  நீண்ட தூரப் பிரயாணங்கள்  மேற்கொள்வது,  ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது போன்ற அற்புதமான பலன்களே நடைபெறும்.  மிதுன ராசியை பொருத்தவரைக்கும்  சனிபகவான் ஒன்பதாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் ஆவதால் பலன்கள் ஏற்ற, இறக்கமாகவே நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 கடக ராசி : அன்பார்ந்த கடக ராசி  வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஏழாம் அதிபதியும், எட்டாம் அதிபதியுமான சனி பகவான் உடன் உங்களின் இரண்டாம் அதிபதி சூரியன் இணைகிறார்.  குடும்பத்தை விட்டு வேலை சம்பந்தமாக பிரிந்து  செல்ல நேரிடலாம் அல்லது உங்களுக்கு தேவையான நபர்களிடமிருந்து எதிர்பார்த்த  நல்ல செய்தி வருதல் போன்றவை நடைபெறும்.  கடக ராசிக்கு அஷ்டமஸ்தானத்தில் சூரியனும் சனியும் இணைந்து இருப்பதால் வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவதற்கான வாய்ப்புகள் உண்டு.  யாரிடமும் பெரிதாக  அடுத்தவரைப் பற்றி குறை கூறுவதை தவிர்த்து விடுங்கள்.  நீங்கள் நல்ல விதமாக சொல்ல போய் அது வேறு விதமாகவும் உங்களுக்கு திரும்ப  வாய்ப்பு உண்டு. 

 சிம்ம ராசி : அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியனும் சனியும் அமர்ந்திருக்கிறார்கள் சூரியன் உங்களுக்கு லக்கனாதிபதி ஆனால்  சனி  பகவானோ உங்களுக்கு ஆறாம் அதிபதியும் ஆவார்.  எனவே குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் உண்டாகக்கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருந்தாலும் உங்களுக்கான தேவைகளை அறிந்து அடுத்தவர்கள் நடந்து கொள்வார்கள்.  நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கை துணையையோ அல்லது நண்பர்களையோ புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  இந்த காலகட்டத்தில் நீங்கள்  எந்தத் தொழிலிலும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.  ஆறாம் அதிபதியுடன் சூரியன் இணைந்து இருப்பதால் கடன்களுக்கான வழியை அது வகுத்து விடும். 

கன்னி ராசி: அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதியின் அடிப்படையில் இரண்டு பிரம்மாண்டமான கிரகங்கள் அதுவும் பாவ கிரகங்கள் உங்களுக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது எதிரியை வெல்லக்கூடிய சக்தியை கொடுக்கும்.   கடன்கள்  அதிகமாக இருந்தால் அதை அடைப்பதற்கான வழி வகைகளை தெரிந்து கொள்வீர்கள்.  தன்னம்பிக்கை தைரியம் பிறக்கும்.  நீங்கள் நினைத்த காரியங்கள் சுலபமாக நடந்தேறும்.  நோய் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பெரும்பாலான கன்னி ராசி வாசகர்களுக்கு இதோ சூரியன் சனி இனைவு நோய் தாக்கம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தும். 

துலாம் ராசி: அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள் நிச்சயமாக அது எண்ணங்களின் ஸ்தானம் என்பதால்  புத்தி வலிமை உண்டாகும்.  யாரேனும் பழைய நண்பர்களை நீங்கள் மறந்து இருந்தால் அவர்களைத் தேடிப் போய் மீண்டும் நட்பு பாராட்டுவீர்கள்.  குழந்தை பேறு ஏற்படும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும்.  எண்ணம் வலிமையாகும் சோர்வாக இருந்த நீங்கள்  இது முதல் சுறுசுறுப்படைவீர்கள்.  கடன் சுமை படிப்படியாக குறையும் காரணம் துலாம் ராசிக்கு  பதினொன்றாம் அதிபதி  ஐந்தாம் வீட்டில் வீற்றிருக்கிறார் ஐந்தாம் வீடு ஆறாம் வீட்டிற்கு  விரைய ஸ்தானம்.  அப்படி என்றால்  கடன்களுக்கு  விரைய ஸ்தானத்தில் இரண்டு பெரிய கிரகங்கள் வீற்றிருப்பதால் கடன்கள் குறையும்.

விருச்சக ராசி: அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள் உங்களுடைய ராசிக்கு பத்தாம் அதிபதி அதாவது நீங்கள் எந்த தொழிலை செய்தாலும் அதில் சிம்மத்தின் பங்கு அதிகமாக இருக்கும்.  அப்படிப்பட்ட சிம்ம ராசியில் அதிபதி சூரியன் உங்களுக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் வீட்டு இருப்பதால் வீட்டிலிருந்து தொழில் செய்பவர்கள் வீட்டை மூலதனமாக கொண்டு தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான காலகட்டம்.  வீட்டைக் கட்டி விட்டேன் அடுத்தது என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறீர்கள் அல்லவா வீட்டை புதுப்பித்து அதை வாடகைக்கு விடுவதற்கான எண்ணங்கள் தோன்றும்.  புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.  பல நல்ல சுப காரியங்கள் நடந்திடும்.

தனுசு ராசி: அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள் மூன்றாம் வீடு என்பது வெற்றியை குறிக்கக்கூடிய இடம். அந்த இடத்தில் உங்கள் ராசியில் ஒன்பதாம் அதிபதி வீட்டில் இருப்பதால் எதையும் சாதிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும்.  எண்ணங்கள் வெற்றி அடையும்.  தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றில் உங்களுக்கு ஏற்றமான கால கட்டமே.  வாழ்க்கையில் நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும்  இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அனைத்தும் சாதகமாகவே முடியப்போகிறது. 

மகர ராசி : அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனியும் சூரியனும் இணைந்து இருக்கிறார்கள். மகர ராசிக்கு சூரியன் அஷ்டமாதிபதி. அப்படி என்றால் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது குடும்பத்தில் சில சில சலசலப்புகள் உண்டாகும்.  ஆனால் அவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது காரணம் உங்கள் ராசியின் அதிபதி சனி பகவானாகி அவர் எட்டாம் வீட்டில் வைத்து இருப்பது உங்களுக்கு ஒரு வகையில் திடீர் தன லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.  குடும்பத்தோடு நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்வீர்கள்.  சூரியன் சனி சேர்க்கை உங்களுக்கு ஒரு நல்ல யோகமான பலன்களை கொண்டு வரும்.

கும்ப ராசி: எனக்கு அன்பான கும்ப ராசி வாசகர்களே, உங்களுடைய  ராசியிலேயே சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள் கும்ப ராசிக்கு ஏழாம் அதிபதி லக்னத்திற்கே வருவதால் எண்ணங்கள் அப்படியே ஈடேறும்.  குறிப்பாக திருமண காரியங்கள் பிரிந்திருந்த தம்பதி ஒன்று  கூடுவார்கள். பழைய நண்பர்கள் ஒன்று சேருவீர்கள்.  இப்படி  நல்ல பல அற்புதமான  பலன்கள் நடைபெறும்.  உங்களைப் பற்றி மற்றவர்கள்  உயர்வாக நினைப்பதற்கான காலகட்டம் இது.  எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை சமாளிக்க கூடிய மன தைரியம் உண்டாகும்.  எதிர்காலம் குறித்த பயம் இருந்தாலும் அவைகள் உங்களுக்கு சாதகமாக தான் வரப்போகிறது. ராசியிலேயே சூரியன் சனி இணைவு ஒரு சிறந்த  இணைவாகவே கருதப்படும். 

மீன ராசி: எனக்கு அன்பான மீன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள் சூரியன் உங்கள் ராசிக்கு ரோக, ருண, சத்ரு அதிபதி.  அப்படி என்றால் கடன்கள் குறையும் உங்கள் உடம்பில் ஏதேனும் நோய் இருந்தால் அவை வெளியில் தெரிந்து அதற்கான மருந்து மாத்திரைகள் மூலம் அவைகளை குணப்படுத்துவதற்கான வழி வகைகளை தேடுவீர்கள்.  நிச்சயமாக மருத்துவமனை உங்களை குணப்படுத்தும்.  உடல் ஆரோக்கியமடையும்.  நோய் தீர்வதற்கான வழி வகைகளையும் கண்டுபிடிப்பீர்கள்.  கடன்கள் பெருமளவு அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.  உங்களுக்குப் பின்னால் சதி வேலையில் ஈடுபட்டிருந்த எதிரிகள் அழிவார்கள்.  உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சனி சூரியன் எனது நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள வைக்கும்.  செலவுகள் சுப செலவுகளாகவே அமையும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.