திருமணத்தில் அணிந்த வெள்ளை கவுனை கருப்பாக்கிய சமந்தா - காரணம் என்ன?

அந்த கல்யாண கவுனை மீண்டும் ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் சமந்தா.

ஏப்ரல் 26, 2024 - 23:05
திருமணத்தில் அணிந்த வெள்ளை கவுனை கருப்பாக்கிய சமந்தா - காரணம் என்ன?

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர்கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த "எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு 2016-ஆம் ஆண்டு நாகசைதன்யாவுடன் நடந்த திருமணத்தின் போது அணிந்திருந்த கவுனை அணிந்து வந்தார். 

அந்த கல்யாண கவுனை மீண்டும் ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் சமந்தா.

இதுக்குறித்து ஆடைவடிவமைப்பாளர் கிரேஷா பஜாஜ் எப்படி சமந்தாவின் கல்யாண கவுன் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

அதில் எப்போதும் புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும். நடக்க எப்போதும் புதிய பாதைகள் உள்ளன. எப்பொழுதும் புதிய கதைகள் சொல்ல இருக்கிறது. 

சமந்தாவுடன் இணைந்து ஒரு புதிய நினைவை உருவாக்கவும், மற்றொரு கதையைச் சொல்லவும் நாங்கள் விரும்பினோம். அழகு எப்பொழுதும் நிரந்தரம் அது ஒவ்வொரு நாளும் புதிய வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!