ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி
இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் தற்போதையை அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இதுவரையில் கலந்துரையாடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.