தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு - வெளியான தகவல்!
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம்
ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது
அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட் ஊதியம் 12,500 ரூபாயிலிருந்து 17,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த அதிகரிப்பானது வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 3,500 ரூபாயை உள்ளடக்கியது என்றும், புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 21,000 ரூபாயாகும்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர் குறித்து ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு முன்மொழிவுகள் தொடர்பில் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், அதனை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.